Porunai Hospitals logo

இரண்டிற்கு மேற்பட்ட கருக்களா? உங்கள் கர்ப்பத்திற்கு கூடுதல் கவனிப்பு தேவை.

பொருநை கரு மருத்துவம் (Fetal Medicine) — உயர் ஆபத்து கர்ப்பங்களுக்கு சிறப்பு கவனிப்பு, தாய் மற்றும் குழந்தைகளின் பாதுகாப்பிற்கு நிபுணர் வழிகாட்டுதல்.

கருக் குறைப்பு (Fetal Reduction) என்றால் என்ன?

இரண்டிற்கு மேற்பட்ட கருக்கள் ஒரே கர்ப்பத்தில் வளரும் போது — தாய்க்கும், கருக்களுக்கும் ஆபத்து ஏற்படும் வாய்ப்பு அதிகம். இதை குறைக்க, கருக்களின் எண்ணிக்கையை மருத்துவ ரீதியாக சீரமைக்கும் சிறப்பு நடைமுறையே கரு குறைப்பு (Fetal Reduction) ஆகும்.

இது அல்ட்ராசவுண்ட் ஸ்கேன் (Ultrasound scan) உதவியுடன் செய்யப்படும் பாதுகாப்பான மற்றும் சர்வதேச அளவில் அங்கீகரிக்கப்பட்ட சிறப்பு சிகிச்சையாகும். பொருநை மருத்துவமனையில், அனுபவம் வாய்ந்த கரு மருத்துவ (Fetal Medicine) நிபுணர்களைக் கொண்டு இச்சிகிச்சை மேற்கொள்ளப்படுகிறது.”.

கருக் குறைப்பு (Fetal Reduction) சிகிச்சை யாருக்கு பரிந்துரைக்கப்படுகிறது?

  • IVF சிகிச்சை / இயற்கை கருத்தரிப்புக்கு பிறகு இரண்டிற்கு மேற்பட்ட கருக்கள் இருப்பின்
  • ஒரு கரு மட்டும் அசாதாரண வளர்ச்சி அல்லது மரபணு குறைபாடு கொண்டிருக்கும் சூழல்
  • கருச்சிதைவு வாய்ப்பு அதிகம் என மருத்துவர் அறிவிக்கும் சூழல்
  • முன்கூட்டிய பிரசவம் வாய்ப்பை குறைக்க வேண்டிய நிலை

கருக் குறைப்பு (Fetal Reduction) மூலம் கிடைக்கும் நன்மைகள்

நன்மை விளக்கம்
  • கர்ப்ப பாதுகாப்பு
  • முழு கர்ப்ப காலம் முடியும் வரை தாயின் ஆரோக்கியம் பாதுகாக்கப்படும்
  • கருச்சிதைவு குறையும்
  • முழுமையான கருச்சிதைவு ஆபத்து கணிசமாக குறையும்
  • ஆரோக்கியமான குழந்தைகள்
  • மீதமுள்ள குழந்தைகள் முழு வளர்ச்சியுடன் பிறக்கும்
  • முன்கூட்டிய பிரசவம் தடுப்பு
  • கால அளவுக்கு முன் பிரசவ ஆபத்து குறையும்
  • தாயின் ஆரோக்கியம்
  • உயர் BP, சர்க்கரை, இரத்த சோகை போன்ற சிக்கல்கள் குறையும்

இந்த சிகிச்சை எவ்வாறு செய்யப்படுகிறது?

முழுமையான ஆலோசனை மற்றும் ஸ்கேன் மதிப்பீடு
மரபணு பரிசோதனை (Genetic Screening) — தேவைப்பட்டால்
சிறந்த நேரம் கண்டறிதல் (பொதுவாக 11–13 வாரங்களில்)
அல்ட்ரா சவுண்ட் வழிகாட்டி மூலம் நிபுணர் சிகிச்சை
சிகிச்சைக்குப் பின் கண்காணிப்பு மற்றும் வழக்கமான ஸ்கேன்கள்

பொருநை சிறப்பம்சங்கள்

சர்வதேச தர கரு மருத்துவம் (Fetal Medicine) சிறப்பு சிகிச்சை பிரிவு

அனுபவம் வாய்ந்த ஃபீட்டல் மெடிசின் நிபுணர்கள்

24/7 மகப்பேறு மற்றும் பெண்கள் சிறப்பு கவனிப்பு

சிறப்பு குழந்தைகள் கவனிப்பு பிரிவு (NICU)

NIPT, 3D/4D ஸ்கேன், ஃபீட்டல் MRI போன்ற நவீன பரிசோதனை வசதிகள்

மரபியல் நிபுணர் ஆலோசனை

FAQs

தாயின் வயிற்றில் ஊசியை செலுத்தி கருக் குறைப்பு செய்யப்படுகிறது. இது தொடர்ச்சியான அல்ட்ராசவுண்ட் வழிகாட்டுதலின் கீழ் செய்யப்படுகிறது.

பல கருக்கள் தாய் சுமந்து அவை வளரும் போது தாய்க்கு பலவிதமான பிரச்சனைகள் ஏற்பட வழியுண்டு, அவ்வாறு பிரச்சனை ஏற்படும் போது கருக் குறைப்பு செய்வது சட்டபூர்வமானது.

ஆம். அல்ட்ரா சவுண்ட் வழிகாட்டியின் கீழ் மேற்கொள்ளப்படும் இந்த சிகிச்சை, சர்வதேச அளவில் 30+ ஆண்டுகளாக நடைமுறையில் உள்ளது. பாதுகாப்பு பதிவு மிக உயர்ந்தது.

கர்ப்பத்தின் 11 முதல் 13 வாரங்களுக்கு இடையில் — இதுவே சிறந்த நேரம்.

இந்த நவீன சிகிச்சை, மீதமுள்ள குழந்தைகளுக்கு பாதுகாப்பான கர்ப்ப காலத்தை வழங்கவே வடிவமைக்கப்பட்டுள்ளது. எனவே பாதிப்பு ஏற்படும் வாய்ப்புகள் குறைவு

கருக் குறைப்பு செய்யும் போது அவ்விடத்தில் மட்டும் மரத்துப்போக ஊசி போட்டு சிகிச்சை மேற்கொள்ளப்படும்

1–2 நாள் ஓய்வு போதுமானது. வழக்கமான ஸ்கேன் கண்காணிப்பு தொடரும்.

நடைபெறும் விவரங்கள்

  • மொத்த சிகிச்சை நேரம்: 30–45 நிமிடங்கள்
  • மருத்துவமனை வாசம்: சாதாரணமாக 1 நாள் மட்டுமே
உங்கள் கர்ப்பத்திற்கு சிறப்பு கவனிப்பு தேவையா?
தாமதிக்காதீர்கள். ஆரம்பத்திலேயே சரியான ஆலோசனை — உங்களுக்கும், உங்கள் குழந்தைகளுக்கும் சிறந்த எதிர்காலம்.

இலவச நிபுணர் ஆலோசனை: +91 63841 12222 | www.porunaihospitals.com